இந்திய கடற்படையில் நாளை புதிதாக சேர்க்கப்படும் Mormugao கப்பல்

இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட புதிய நாசகாரி (destroyer) கப்பலான Mormugao இந்திய கடற்படையில் நாளை சேர்க்கப்பட உள்ளது.
மும்பை கடற்படை தளத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில், அக்கப்பல் சேர்க்கப்படவுள்ளது.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள அந்த கப்பலில், நவீன சென்சார்கள், கண்காணிப்பு ரேடார் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் ஏவுகணை அமைப்புகளும் அந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. P15 Braver பிரிவை சேர்ந்த 2வது கப்பல் இதுவாகும். இதே பிரிவை சேர்ந்த கப்பல், இந்திய கடற்படையில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது.
Comments