வீடு தீப்பற்றி எரிந்ததில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு..! தெலுங்கானாவில் சோகம்

தெலுங்கானா மாநிலத்தில், வீடு திடீரென தீப்பற்றி எரிந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஞ்ரியலா மாவட்டம், ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் நேற்று இரவு கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சித்த நிலையில், அதற்குள்ளாக வீடு முழுவதும் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.
Comments