சேலத்தில், நண்பனையே கடத்திச் சென்று கூகுள் பே மூலம் ரூ.8 ஆயிரம் பணம் பறித்த இளைஞர்

0 1023

சேலத்தில், நண்பனையே கடத்திச் சென்று போலி போலீஸை வைத்து மிரட்டி, கூகுள் பே மூலம் 8 ஆயிரம் பணம் பறித்த இளைஞர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வரும் மணிகண்டன், படித்துக் கொண்டே வேலையும் பார்த்து வருகிறார். இவரது நண்பனான தமிழரசன் என்பவன், நேற்று மாலை மணிகண்டனிடம் நைசாக பேசி குமரகிரிப்பேட்டை அடிவாரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளான். தமிழரசனின் கூட்டாளிகள் 4 பேரும் பைக்கில் உடன் சென்றுள்ளனர்.

அப்போது ஷாஜகான் என்பவன் தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்ட நிலையில், 5 பேரும் மணிகண்டனை சரமாரியாக தாக்கி கூகுள் பே மூலம் 8 ஆயிரம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments