ஜோதிப் பிழம்பாய் காட்சி அளித்த அண்ணாமலையார் மகாதீபம் நிறைவு..!

திருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாய் காட்சி கொடுத்த அண்ணாமலையாரின் மகா தீபம் நிறைவு பெற்றதையடுத்து மகா தீபக் கொப்பரையை மலையிலிருந்து இறக்கும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி அன்று மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 300 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்த தீப கொப்பரையில் கடந்த 11 நாட்களாக அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக காட்சியளித்தார்.
Comments