புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பள்ளி மாணவன் மற்றும் மாணவியின் உறவினர் போக்சோவில் கைது..!

0 2289

புதுச்சேரியில் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பள்ளி மாணவன் மற்றும் மாணவியின் உறவினரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்துள்ளனர்.

வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட பிச்சுவீரன்பேட் பகுதியை சேர்ந்தவர்  வனிதா.

இவரது மகளுக்கு  கடந்த சில தினங்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்தனர்.

இதில் அவர் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், பள்ளியில் படித்து வந்தபோது மாணவி சக மாணவர் ஒருவரை காதலித்தது தெரியவந்துள்ளது.

இதையறிந்த பெற்றோர் மகளுக்கு 18 வயது ஆனபின்னர் உறவினர் மகன் விக்ரம் என்பவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே விக்ரமுக்கும், மாணவிக்கும் ஏற்பட்ட பழக்கத்தால் மாணவி  பலத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பள்ளி மாணவன் மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments