தெலுங்கானா மாநிலத்தில் ராட்சத கிரேன்மூலம் காரை திருடி சென்ற மர்ம நபர்கள்..!

தெலுங்கானா மாநிலத்தில் ராட்சத கிரேனை கொண்டு வந்த மர்ம நபர்கள் காரை திருடி சென்ற சிசிடிவி பதிவு வெளியாகி உள்ளது.
வாரங்கலைச் சேர்ந்த ஜெயபால் ரெட்டி என்பவர் தனது வீட்டுமுன் நிறுத்தப்பட்டு இருந்த காரைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்மநபர்கள் சிலர் ராட்சத கிரேனை கொண்டு காரை தூக்கி சென்ற காட்சி இடம்பெற்று இருந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட காரை பிரித்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
தற்போது போலீசார் வாராங்கல் நகரில் உள்ள பழைய இரும்பு கடைகளில் அந்த காரை தேடி வருகின்றனர்.
Comments