பிரபல வைர வைரவியாபாரி மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. மேலும் 3 வழக்குகள் பதிவு..!

0 1099

பிரபல  வைர வியாபாரி மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. மேலும் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது.மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளை அதிகாரிகளை பயன்படுத்தி, 6 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, டோமினிகா நாட்டில் உள்ள ஆன்டிகுவா தீவில் தஞ்சம் அடைந்தார்.

இந்த நிலையில் மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. மேலும் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் தேசிய வங்கியின் துணை மேலாளர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதோடு மெகுல் சோக்சி மற்றும் அவரது நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments