பாஜக பிரமுகர் கொலை வழக்கு.. தவறான விசாரணையால் கைது செய்யப்பட்ட இருவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு..1

0 1101

2013ம் ஆண்டு பரமக்குடி பாஜக பிரமுகர் முருகேசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இருவருக்கு, 18 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பாஜக செயலாளர் முருகேசன் கொலை வழக்கில் ராஜா முகமது, மனோகரன் ஆகிய இருவரை, அப்போதைய பரமக்குடி இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் கைது செய்து சிறையில் அடைத்தார். இவர்கள் குற்றவாளி இல்லை என்பது, சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இருவரும் விடுவிக்கப்பட்டனர் .

இதனால், இழப்பீடு கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி, காவல்துறை ஆய்வாளரின் தவறான விசாரணையால் கைது செய்யப்பட்ட இருவரது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, ராஜா முகமதுவுக்கு 10 லட்சமும், மனோகரனுக்கு 8 லட்சமும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

அந்த தொகையை இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரிடம் இருந்தே வசூல் செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments