துருக்கியில் காவல்துறை வாகனத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு..!

0 1150

துருக்கியில், போலீஸ் வாகனத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில், காவல்துறை அதிகாரிகள் 8 பேர் காயமடைந்தனர்.

அதிகாலை, டியார்பகிர் நகரம் அருகேயுள்ள புறவழிச்சாலை வழியாக, போலீஸ் கவச வாகனம் சென்றபோது, சாலையோரத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியது.

இந்த தாக்குதலில் வாகனத்திலிருந்த 8 போலீசார், காயமடைந்தனர். சந்தேகத்தின்பேரில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்டை நாடான சிரியாவில் வசிக்கும் குர்து போராளிகள் மீது துருக்கி வான் தாக்குதல் நிகழ்த்தி வருவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments