அரசு பேருந்தில் சென்ற மூதாட்டியை தரக்குறைவாக பேசிய நடத்துநர்

0 2486

தஞ்சாவூரில் அரசு பேருந்தில் சென்ற மூதாட்டியை, நடத்துநர் தரக்குறைவாக பேசிய காட்சிகள் வெளியான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருக்கருக்காவூர் வழித்தடத்தில் சென்ற தடம் எண் 34A என்ற அரசு பேருந்தில், மெலட்டூரில் ஏறிய மூதாட்டி, தஞ்சாவூருக்கு சென்ற நிலையில், மீண்டும் அதே பேருந்தில் ஏறியுள்ளார். அதனால் நடத்துநர் ரமேஷ்குமார், மூதாட்டியை தரக்குறைவாக பேசினார்.

இதனை சக பயணிகள் வீடியோ பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில், நடத்துனர் ரமேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments