நியூயார்க்கில் கரை ஒதுங்கிய 32 அடி நீளமுள்ள ஸ்பெர்ம் திமிங்கலம் உயிரிழப்பு..!

நியூயார்க்கில் ராக்வே கடற்கரையில், 32 அடி நீளமுள்ள ஸ்பெர்ம் திமிங்கலம் கரை ஒதுங்கியது.
கடந்த செவ்வாய்க்கிழமை, 3 முதல் 4 வயதுடைய பெண் திமிங்கலம் ஒன்று, கடல் அலையில் அடித்து வரப்பட்டதை அங்கிருந்த அலைச்சறுக்கு பயிற்சியாளர்களும், கட்டுமானத் தொழிலாளர்களும் பார்த்துள்ளனர்.
உயிருடன் இருந்த அந்த திமிங்கலத்தை, மீண்டும் கடலுக்குள் தள்ளி அவர்கள் காப்பாற்ற முயன்ற நிலையில், அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்ததால், அந்த திமிங்கலம் உயிரிழந்தது.
Comments