விஜய் திவாஸ் தினத்தையொட்டி, தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செய்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 1058

விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு, டெல்லியிலுள்ள தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில், இந்தியா வெற்றிபெற்றதை அடுத்து, டிசம்பர் 16-ம் தேதி விஜய் திவாஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1971- ம் ஆண்டு போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தேசிய போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் வி.ஆர்.சவுதாரி மற்றும் கப்பற்படை துணைத்தளபதி கோர்மேட் ஆகியோரும் தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments