ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 9 லட்சம் ரூபாய் மோசடி செய்த விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் கைது..!

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 9 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரின் கீழ் விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவராக இருக்கும் பாண்டியன் என்பவர் தனது இரு மகன்களுக்கு ரயில்வே மற்றும் துறைமுகத்தில் வேலை பெறுவதற்காக திருத்தங்கல்லைச் சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் கலையரசனிடம் 11 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
ஆனால் அவர்கள் சொன்னபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் 2 லட்சம் ரூபாயினை பாண்டியனிடம் கொடுத்த நிலையில் மீதிப்பணத்தை தராமல் ஏமாற்றி வந்த தாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் கலையரசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றொரு நபரான சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
Comments