நிலத்தை உட்பிரிவு செய்ய விவசாயியிடம் ரூ.14ஆயிரம் லஞ்சம் வாங்கிய குறுவட்ட அளவர் கைது..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நிலத்தை உட்பிரிவு செய்ய விவசாயியிடம் 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குறுவட்ட அளவர் கைது செய்யப்பட்டார்.
குமணன் தொழு கிராமத்தை சேர்ந்த ராமேந்திரன் என்பவர் தனது 5 ஏக்கர்பூர்வீக நிலத்தில் 1.47 ஏக்கர் நிலத்தை உட்பிரிவு செய்து தரும்படி மயிலாடும்பாறை குறுவட்ட அளவர் செல்வரங்கனிடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரும்படி செல்வரங்கனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராமேந்திரன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
தொடர்ந்து அவர்களது ஆலோசனைப்படி அவர் ரசாயனம் தடவிய ரூபாயினை செல்வரங்கனிடம் வழங்கிய போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
Comments