மணல் கொள்ளை குறித்து தகவல் அளித்த நபரின் வீடு புகுந்து தாக்குதல்..!

0 1368

கடலூரில் மணல் கொள்ளை குறித்து தகவல் அளித்த நபரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.மரூர் கிராமத்தில் தொடர்ச்சியாக கிராவல் மணல் திருடப்படுவதாக, ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் சேகர் தகவல் தெரிவித்ததன் பேரில், கிராம நிர்வாக அலுவலர் பிரித்திவிராஜ், வட்டாட்சியர் அலுவலகத்திலும், காவல்நிலையத்திலும் புகாரளித்தார்.

இதனால், ஆத்திரமடைந்த மணல் கொள்ளை கும்பல், சேகரின் வீடு புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments