உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல்கேரியாவில் நேட்டோ படைகளின் தற்காப்பு பயிற்சி

0 2126

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல்கேரியாவில் நடைபெற்ற நேட்டோ படைகளின் ராணுவ பயிற்சியை இத்தாலிய படைகள் முன் நின்று நடத்தின.

இதில் இத்தாலியின் தரைப்படைக்கான போர் வாகனங்கள் இடம்பெற்றதுடன், அல்பேனியா, கிரீஸ், வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் அமெரிக்க படையினர் தற்காப்பு பயிற்சிகளை மேற்கொண்டனர்.

உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்கேரியாவில் நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. ஹங்கேரி, ருமேனியா,மற்றும் சுலோவோக்கியா, நாடுகளிலும் நேட்டோ படைகள் நிறுத்தப்பட்டுள்ளன .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments