'சோயுஸ்' விண்கலத்தில் 'கூலன்ட்' கசிவு.. ரஷ்ய விண்வெளி வீரர்கள் திட்டமிட்டிருந்த நடைபயணம் ரத்து..!

0 5833

விண்கலத்தில் வெப்பத்தை தணிக்கும் கூலன்ட்டில் ஏற்பட்ட கசிவால், ரஷ்ய விண்வெளி வீரர்கள் விண்ணில் திட்டமிட்டிருந்த நடைபயணம் ரத்து செய்யப்பட்டது.

2 மாதங்களுக்கு முன், சர்வதேச விண்வெளி நிலையம் வந்தடைந்த சோயுஸ் MS-22 என்ற அந்த விண்கலத்திலின் பின்புறத்திலிருந்து, இன்று காலை வெள்ளைநிறத் துகள்கள் வெளியேறத் தொடங்கின.

விண்கலத்தின் மின்சார அமைப்புகளின் வெப்பத்தை தணிக்கும் கூலண்டில் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதனால் விண்வெளி வீரர்களுக்கு எவ்வித ஆபத்துமில்லை என்றும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments