இந்தியாவைத் தாக்கினால் பாகிஸ்தான் அதன் பலனை கூடுதலாக அனுபவிக்கும் - முன்னாள் ராணுவத் தளபதி நரவனே!

0 1383

இந்தியாவை தாக்கினால் அதற்கான பலனை கூடுதலாக அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று பால்கோட்டில் இந்திய விமானப்படை தீவிரவாக முகாம்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு உணர்த்தியிருப்பதாக முன்னாள் ராணுவத் தளபதி நரவனே தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடற்ற வன்முறையை ஏவும் அணு ஆயுதங்கள் உள்ள நாடாக பாகிஸ்தான் இருப்பதாக அவர் சாடினார். 2019ம் ஆண்டில் பால்கோட் தாக்குதல் சம்பவத்தின் போது இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதையும் கேப்டன் அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.

சீனா பலகாலமாகவே எல்லையை மாற்றியமைக்க சிறியளவில் முயற்சிப்பதாகவும் இதனால் அவர்கள் நல்ல பலனை அடைந்து உள்ளதாகவும் நாரவானே குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments