நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது..!

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவிக்கு, உடற்கூறியியல் ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான ஆடியோ வெளியான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சதீஷ் என்ற அந்த ஆசிரியர், மாணவியை தனது வீட்டிற்கு அழைத்த போது, பதிலுக்கு அந்த மாணவி ஏதேதோ காரணங்களை சொல்லி தவிர்க்கும் உரையாடல் பதிவு வெளியாகி இருந்தது
கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சதீஷை கைது செய்தனர்.
Comments