செல்லும் இடமெல்லாம் தங்கத்துக்கு சிறப்பான சம்பவம் செய்யும் போலீஸ்..! TTF வாசனுக்கு வந்த சோதனை..!

0 3716

கடலூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் ரசிகர்களை திரட்டிய யூடியூபர் டிடிஎஃப் வாசனை விரட்டி அடித்த போலீசார், 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது

கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரது அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக பைக் ரைடர் டிடி எஃப். வாசன் வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்காக பல இடங்களில் அனுமதியின்றி வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டது. இது தொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் பேனர்களும் அகற்றப்பட்டன.

இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகல் புதுப்பாளையம் பகுதியில் டிடிஎஃப் வாசன் ஆதரவாளர்களான 2 k கிட்ஸ் பைக்கர்கள் குவிய தொடங்கினர் . சம்பவ இடத்திற்கு காரில் வந்து இறங்கிய டிடிஎஃப் வாசனை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் இரண்டு சக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து பல்வேறு இடங்களில் வாகனங்களை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தியதால் புதுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார், வாகனங்களை எடுத்து சென்று அப்புறப்படுத்துமாறு பலமுறை கேட்டுக்கொண்டனர், ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கையும் விடுத்தனர். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை.

இதனை தொடர்ந்து வாசனுடன் வந்த அடி பொடிகளை தடியடி நடத்தி போலீசார் விரட்டி அடித்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான வாகனங்களை நிறுத்திவிட்டு அவர்கள் ஓடினர்.

அலுவலகத்தை திறந்து வைத்து விட்டால் போதும் என்று அப்பீட்டான டிடிஎஃப் வாசன் காரில் புறப்பட்டபோது அவரை இரண்டு சக்கர வாகனங்களில் அதிக அளவில் ஒலி எழுப்பியவாறு அவரது குட்டி தங்கங்கள் பின் தொடர்ந்தனர்.

அப்பொழுது கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே வரும்பொழுது சாலையில் சென்றவர்கள் மீது இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் 2 சக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்து தாக்கியதுடன் டிடிஎஃப் ஆதரவாளர்களின் 200க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி, அபராதம் விதித்து அவற்றை வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உடன் வந்து வாகனங்கள் அனைத்தையும் செல்போன் மூலம் படம் எடுத்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். TTF வாசன் உள்ளிட்ட ஏராளமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

இவ்வளவு களே பாரத்துக்கும் நடுவே, போலீசுக்கு பயந்து புயல் வேகத்தில் காரில் தப்பிச்சென்ற டிடி எஃப் வாசனின் கார் பின்னால் ஓடிய 2 k முரட்டு கிட்ஸ் ஒருவருக்கு அன்பு பரிசாக ஓடும் காரில் இருந்தே வாசன் முத்தமிட்ட கூத்தும் அரங்கேறியது

இது தொடர்பாக டிடிஎஃப் வாசன் கூறுகையில் போலீஸர் கூட்டத்தை பயமுறுத்துவதற்காக தடியை தரையில் அடித்து விரட்டியதாக தெரிவித்தார். பல இடங்களில் அன்புடன் நடந்து கொள்வதாகவும், பல இடங்களுக்கு செல்லும் பொழுது அக்காக்கள் தங்கைகள் தம்பிகள் அண்ணன்கள் என பலரால் , தான் பல்வேறு சிக்கலில் சிக்குவதாக அவர் தெரிவித்தார்.

தான் ஆரம்ப காலத்தில் ஹெல்மெட் போடாமல் தான் சென்றதாகவும் ஒருமுறை கீழே விழுந்து அடிபட்ட பிறகு தற்போது ஹெல்மெட் அணியாமல் செல்வதில்லை என தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments