காங்கோ குடியரசில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 141 பேர் பலி..!

0 1755

ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழப்பு  மேலும் அதிகரிக்க கூடும் என அந்த நாட்டின் சுகாதரத்துறை அமைச்சர் Jean-Jacques அச்சம் தெரிவித்துள்ளார்.

தலைநகர் Kinshasa உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

பல தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால்  போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மழை வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டதுடன் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments