மாந்திரீகம் என்ற பெயரில், மனைவியை கட்டி வைத்து சித்ரவதை செய்த கணவன் உள்ளிட்ட 6 பேர் கைது..!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே, மாந்திரீகம் என்ற பெயரில், மனைவியை கட்டி வைத்து வாளால் தாக்கி சித்ரவதை செய்து வந்த கணவன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலப்புழா புதுவச்சால்தரை பகுதியை சேர்ந்தவர் அனீஸ். இவர், கருவற்றான் பகுதியை சேர்ந்த பெண்ணை, 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
திருமணமான நாள் முதல், மனைவி மீது பேய் குடிகொண்டிருப்பதாக கூறி, துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் உறவினர்களான ஷிபு-ஷானிகா தம்பதியின் வழிகாட்டுதல் படியும், குளத்துப்புழா பகுதியை சேர்ந்த மந்திரவாதிகளான சுலைமான், ஹிமாமுதீன், அன்வர் உசேன் ஆகியோரை வரவழைத்தும், மனைவியை கட்டிப்போட்டு கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தம்மை வாளால் வெட்டி ரத்தம் எடுத்து, மாந்திரீகம் செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து அனீஸ் மற்றும் அவனுடன் இணைந்து துன்புறுத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யபட்டனர்.
Comments