தமிழ்நாட்டின் 35வது அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்..!
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். உதயநிதி ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்களுக்கு, தமது செயல்பாடுகளால் பதிலளிப்பேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து, தலைமைச்செயலகத்திற்கு சென்று, உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார்.
விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு,
முதலமைச்சர் கபடி, சிலம்பாட்ட போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட 3 கோப்புகளில் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார். விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு, ஓய்வூதியம் உயர்த்தப்பட்டதற்கான ஆணையையும் வழங்கினார்.
அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு, நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். உதயநிதி பதவியேற்பு விழாவில், அதிமுக, பாஜக சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை.
Comments