தனியார் காற்றாலையில் ரூ.10.5 லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர் திருட்டு.. 7 பேர் கைது!

0 1515

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் காற்றாலையில் பத்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பர் ஒயர்கள் திருடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இரண்டு ஆண்டுகளாக இயங்காமல் உள்ள காற்றாலையை வேறொரு நிறுவனம் விலைக்கு வாங்கி கடந்த சில நாட்களாக பழுதுகளை சரிசெய்து வருகின்றன. இந்நிலையில் காற்றாலை இருந்த இடத்தின் பூட்டை உடைத்து 600 கிலோ காப்பர் ஒயர்கள், கணினி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

திருடிய காப்பர் ஒயர்களை விற்பனை செய்துவிட்டு கார் மற்றும் டெம்போவில் வந்துகொண்டிருந்த சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 7 பேரை கைதுசெய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments