கோல்டன் குளோப் விருதுகளுக்கு ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பரிந்துரை..!

0 1668
கோல்டன் குளோப் விருதுகளுக்கு ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பரிந்துரை..!

ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், 2 கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கருக்கு அடுத்தப்படியாக, உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா, வரும் 10-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், ஆங்கிலம் அல்லாத சிறந்த படத்திற்கான பிரிவிலும், படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவிலும் பரிந்துரை பட்டியலில் உள்ளதாக, கோல்டன் குளோப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ராம்சரண் சீதாராம ராஜுவாகவும், ஜூனியர் என்.டி.ஆர். கொமரம் பீம் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments