நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி பன் மடங்காக அதிகரிப்பு..!

கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி காரணமாக நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் அளவு ஐந்து கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், கத்தார், பஹ்ரைன் மற்றும் மாலத்தீவுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கத்தாருக்கு மாதந்தோறும் சுமார் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த நிலையில் உலகக் கோப்பை போட்டியையொட்டி முட்டையின் தேவை அதிகரித்ததது.
2 கோடியே இருபது லட்சமாக அதிகரித்த முட்டையின் ஏற்றுமதி தற்போது ஐந்து கோடியை எட்டியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Comments