18 ஆண்டுகளாக இருளில் தவிக்கும் மீனவ குடும்பங்கள்.. செல்போன் சார்ஜ் செய்ய வேறு பகுதிக்குச்செல்லும் அவலம்..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே சுனாமி பாதிப்பால் இடமாற்றம் செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தினர், மின்சார இணைப்புக்கோரி சுமார் 18 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் மனு அளித்து, போராடி வருகின்றனர்.
2004ம் ஆண்டு தாக்கிய சுனாமியால் வேம்பாரைச் சேர்ந்த 20 மீனவர் குடும்பத்தினர் அரசின் புறம்போக்கு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அவர்களில், சிலருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டதால், மற்றவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற முடியவில்லையென கூறப்படுகிறது.
இதனால், தெருவிளக்கு வெளிச்சத்தையே அதிகமாக நம்பியிருக்கும் இவர்கள் தங்களது செல்போனை சார்ஜ் செய்வதற்கும் கூட அருகிலுள்ள பகுதிக்குச்செல்ல வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது.
Comments