குடும்பத்தை அழித்த மடக்குடி போதை 5 பேர் கொலை..! குடிகார தந்தை தற்கொலை..!

0 2196

திருவண்ணாமலை அருகே குடி போதையில் மனைவி , குழந்தைகள் என 5 பேரை கோடாரியால் வெட்டிக்கொலை செய்து விட்டு, குடிகார ஆசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பழனிச்சாமி.

இவருக்கு வள்ளி என்ற மனைவியும், ஐந்து மகள்களும், ஒரு மகனும் இருந்தனர்.

வேலைக்கு செல்லாமல் போதையில் சுற்றித்திரிந்த பழணிச்சாமிக்கும் வள்ளிக்கும் கடந்த ஒரு வாரமாக குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது,

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு வழக்கம்போல் அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், மீண்டும் பழனிச்சாமிக்கும் வள்ளிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

போதையில் இருந்த பழனிச்சாமி, ஆத்திரத்தில் மனைவி மற்றும் 4 மகள்களையும் ஒரு மகனையும் கோடாரியால் வெட்டிவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனைவி வள்ளி, 3 மகள்கள், ஒருமகன் ஆகிய 5 பேர் பலியான நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவர்களின் மூத்த மகள் சௌந்தரியை திருமணம் செய்து கொடுத்த நிலையில், தனது தந்தையின் குடிபழக்கத்தால் அழிந்த தனது குடும்பத்தை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார்

கொலை செய்யப்பட்ட 5 பேர் மற்றும் தற்கொலை செய்து கொண்ட கொலையாளி பழனிச்சாமி ஆகிய 6 பேரது சடலங்களை கைப்பற்றிய போலீசார், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments