8 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய மலேசிய விமானம் திட்டமிட்டே மூழ்கடிக்கப்பட்டதா.?

0 3479

8 ஆண்டுகளுக்கு முன், 239 பயணிகளுடன் தென் சீன கடலில் மாயமான மலேசிய விமானத்தை பைலட் திட்டமிட்டே கடலில் மூழ்கடித்திருக்கலாம் என வல்லுநர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

கோலாலம்பூரில் இருந்து பீஜிங் புறப்பட்ட அந்த விமானத்தின் Landing Gear கதவை, மடகாஸ்கர் நாட்டு மீனவரின் மனைவி துணி துவைக்கும் சலவைக்கல்லாக 5 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளது அண்மையில் தெரியவந்தது.

அதிலிருந்த உராய்வுகளை ஆராய்ந்த பிரிட்டன் பொறியாளர் Richard Godfrey, விமானி திட்டமிட்டே Landing Gear-ஐ பயன்படுத்தி விமானத்தை வேகமாக கடலில் தரையிறக்கியிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

Landing Gear-ஐ பயன்படுத்தி, விமானத்தை தண்ணீரில் தரையிறக்கினால், அது பல துண்டுகளாக நொறுங்கி, பயணிகள் வெளியேறுவதற்குள் வேகமாக மூழ்கிவிடும் என்பதால், ஆதாரங்களை அழிக்கும் நோக்கிலேயே விமானி அவ்வாறு செய்துள்ளதாகவும் Godfrey குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments