தமிழ்நாட்டில் 6 வகை பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து அரசாணை..!

தமிழ்நாட்டில் 6 வகை பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி, எலிக்கொல்லி மருந்துகள், தற்கொலை மரணங்களுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அபாயகரமான பூச்சிக்கொல்லிகளைத்தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு பரிந்துரையின் பேரிலும், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையிலும் மோனோகுரோட்டோபாஸ் (monocrotophos), ப்ரோஃபெனோபோஸ் (profenophos), அசிபேட் (Acephate), ப்ரோஃபெனோபோஸ் சைபர்மெத்ரின் (profenophos + cypermethrin), குளோர்பிரிபாஸ் சைபர்மெத்ரின் (Chlorphyriphos + cypermethrin) மற்றும் குளோர்பிரிபோஸ் (Chlorphyriphos) ஆகிய 6 பூச்சிக்கொல்லிகளுக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Comments