உதகை அருகே 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3 பெண்கள் சடலமாக கண்டெடுப்பு

0 825

நீலகிரி மாவட்டம் உதகை அருகே 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், அதில் 3 பேரின் உடல்கள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டன.

உதகை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஆனிக்கல் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று ஆனிக்கல் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீப நிறைவு விழாவிற்கு வந்த, கவரட்டி ஜக்கலோரை கிராமத்தை சேர்ந்த சரோஜா, வாசுகி, விமலா, சுசீலா ஆகியோர் மாலை வீடு திரும்ப, தரைபாலத்தை கடந்து சென்றபோது, காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.

தீயணைப்புத் துறையினர் இன்று காலை மூன்று பெண்களை சடலமாக கண்டெடுத்த நிலையில், சுசீலா என்ற பெண்ணை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments