மெரினா கடற்கரையில் நள்ளிரவில் பெண்ணிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது

0 1170

சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவில் கத்தியால் தாக்கி பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் கடற்கரைக்கு ஆட்டோவில் வந்த சாந்தி என்ற பெண்ணிடம், தகராறில் ஈடுபட்ட 4 பேர், கத்தியால் தாக்கி பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளனர். சாந்தி அளித்த புகாரின்பேரில், சந்தோஷ் என்பவனை நேற்று நள்ளிரவே சுற்றி வளைத்து பிடித்த போலீசார், தற்போது ராம் பிரசாத் என்பவனையும் கைது செய்துள்ளனர்.

புகாரளித்த சாந்தி மீது கஞ்சா கடத்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவர் கடற்கரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டாரா? அதனால் தாக்குதல் நடைபெற்றதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், சாந்தி இதுவரை எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதால், அவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments