வாடகையை வசூலிக்க வந்த அரசு அதிகாரிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய பெண்.. போலீசார் வழக்குப்பதிவு!

0 1967

மைசூருவில் வாடகையை வசூலிக்க வந்த அரசு அதிகாரிகளிடம் பெண் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

சதேஹள்ளி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பகுதியை காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் நிர்வாகியான சபீ என்பவர் வாடகைக்கு எடுத்து பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2 வருடங்களாக அந்த இடத்திற்கு இவர் வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வாடகைப் பணத்தை வசூலிக்க அரசு அதிகாரிகள் சென்ற போது சபீ மற்றும் அவரது மனைவி ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

சபீ யின் மனைவி தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அதிகாரிகளிடம் காண்பித்து கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்லத் தயார் என்று மிரட்டியுள்ளார்.

வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments