இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு தப்ப முயன்ற இளைஞர்.. மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!

சென்னை கோயம்பேடு அருகே இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு தப்ப முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஜெய் பார்க் அருகே நின்றிருந்த பைக்கை இளைஞர் ஒருவர் திருடி தப்ப முயன்றபோது, அதனை பார்த்த பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்தனர்.
சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வந்த புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்த டேனியல், கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு நண்பருடன் சேர்ந்து வழிப்பறி, செல்போன் பறிப்பு, பைக் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
கல்லூரி மாணவனை திருட்டு சம்பவத்தில் ஈடுபடுத்திய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments