புரட்சித் தளபதி கிடையாதாம்.. இனி வெறும் விஷால் தானாம்..!

0 2858

தனக்கு கதை பிடித்திருந்தால் படம் பண்ணுவேன் என்றும், இல்லையென்றால் இயக்குனரை தனியாக ரூமுக்கு கூட்டிட்டு போய் குமுறுவேன் என்றும் நடிகர் விஷால் கூறி உள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள வணிக வளாகத்தில் லத்தி திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரமணா, நடிகர் நந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேடையில் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு பேசத்தொடங்கிய நடிகர் விஷால், இந்த நிகழ்ச்சியில் யாருக்கும் பூங்கொத்து கொடுக்காமல் சேமித்த பணத்தில், 2 பெண் குழந்தைகளின் படிப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி அனைவருக்கும் சல்யூட் அடித்தார் விஷால்.

"லோகேஷ் மீது பொறாமையாக உள்ளது. அவர் தளபதி விஜய் வைத்து படம் இயக்கி உள்ளார். நானும் தளபதி விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசையாக உள்ளது. 18 வருடங்கள் வாங்கிய அடியை ஒரே படத்தில் வாங்கி உள்ளேன்" என்று கூறிய விஷால், தனக்குக் கதை பிடித்திருந்தால் படம் பண்ணுவேன் என்றும் இல்லையென்றால் இயக்குனரை தனியாக ரூமுக்கு கூட்டிட்டு போய் குமுறுவேன் என்றார்.

விஷால் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் 'புரட்சித் தளபதி' என்று முழக்கமிட்டார். உடனடியாக அந்த ரசிகரை நோக்கி கையசைத்து, "இல்லை இல்லை இனிமேல் புரட்சித் தளபதி கிடையாது வெறும் விஷால்தான்" என்று தெரிவித்தார்

புரட்சித் தளபதி பட்டம் போட்ட பின்னர் அவரது படங்கள் எதுவும் சரியாக போகாத காரணத்தால் , தன்னடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விஷால் தனக்குத் தானே போட்டுக் கொண்ட புரட்சித் தளபதி பட்டத்தை துறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments