வடமேற்கு சீனாவில் கடும் பனிப்பொழிவு.. உறைய தொடங்கிய புகழ்பெற்ற ஹூகோ நீர்வீழ்ச்சி..!

0 1561

வடமேற்கு சீனாவில் நிலவும் கடும் பனிப்பொழிவால் ஷாங்சி மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ஹூகோ நீர்வீழ்ச்சி உறைய தொடங்கியுள்ளது.

நீர்வரத்து உயரும்போது மண் மற்றும் மணலோடு பெருக்கெடுத்துவரும் நீர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும். இதனை மஞ்சள் ஆற்றிலிருந்து காணும்போது அருவி தங்க நிறத்தோற்றத்தில் தெரியும், காட்சி சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.

சீனாவின் 2-ஆவது பெரிய நீர்வீழ்ச்சியான இதில் நீர்வரத்து குறைந்து அருவில் ஆங்காங்கே பனித்துருவல்கள் படர்ந்துள்ளன.

உறைபனியின் மீது சூரிய ஒளிவெளிச்சம் பட்டு நீர்வீழ்ச்சி வானவில் கோலம் பூண்டு வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments