இத்தாலி தலைநகர் ரோமில் தேநீர் விடுதியில் துப்பாக்கிச்சூடு.. பிரதமரின் பெண் தோழி உள்பட 3 பெண்கள் பலி..!

0 1704
இத்தாலி தலைநகர் ரோமில் தேநீர் விடுதியில் துப்பாக்கிச்சூடு.. பிரதமரின் பெண் தோழி உள்பட 3 பெண்கள் பலி..!

இத்தாலியில் தேநீர் விடுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், அந்நாட்டு பிரதமரின் தோழி உள்பட 3 பெண்கள் பலியாகினர்.

தலைநகர் ரோமில் உள்ள தேநீர் விடுதியில், அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினர் சந்தித்து பேசி கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த நபர், கைத்துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதில், 3 பெண்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை, அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். குடியிருப்பு சங்க நிர்வாகிகளுடன் ஏற்பட்ட பிரச்னையால், அந்த நபர் துப்பாக்கிச்சூடு பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கியை திருடி வந்து, துப்பாக்கிச்சூடு நடத்தியது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments