குழந்தை பிறந்ததற்காக பார்ட்டி கேட்ட நண்பனை குத்திக்கொலை செய்த சக நண்பன்..

திருப்பத்தூர் அருகே, குழந்தை பிறந்ததற்காக பார்ட்டி கேட்ட நண்பனை, தங்கையின் காதலுக்கு காரணம் என எண்ணி, மதுபோதையில் கொலை செய்த சக நண்பனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் அருகே, குழந்தை பிறந்ததற்காக பார்ட்டி கேட்ட நண்பனை, தங்கையின் காதலுக்கு காரணம் என எண்ணி, மதுபோதையில் கொலை செய்த சக நண்பனை போலீசார் கைது செய்தனர்.
கெளதம்பேட்டையை சேர்ந்த முகேஸ்வரனுக்கு, 10 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்த நிலையில், அவரது நண்பர் விஜய்பிரசாந்த் பார்ட்டி கேட்டுள்ளார்.
மதுபோதையில் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, முருகேஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜய் பிரசாந்தை குத்திக்கொலை செய்து தப்பியதாக கூறப்படுகிறது.
முருகேஸ்வரனை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அவரது தங்கையை விஜய்பிரசாந்தின் நண்பன் காதலித்ததும், அதற்கு காரணம் விஜய்பிரசாந்த் என எண்ணி, பார்ட்டி கேட்டதை சாதகமாக பயன்படுத்தி கொலை செய்ததும் தெரிய வந்தது.
Comments