வேடந்தாங்கல் ஏரி நிரம்பிய நிலையில் பறவைகள் சரணாலயத்தில் வந்து குவிந்த ஏராளமான வெளிநாட்டு பறவைகள்..!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள வேடந்தாங்கல் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.
பாகிஸ்தான், பர்மா, இலங்கை, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து வர்ணநாரை, சாம்பல் நாரை, நத்தைக்குத்தி நாரை உள்ளிட்ட 26 வகையான பறவைகள் வரத்தொடங்கியுள்ளன.
அக்டோபர் தொடங்கி ஜூன் மாதம் வரை இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும் விதவிதமான பறவைகளை காண, வேடந்தாங்கலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
ஏரி முழுமையாக நிரம்பியுள்ளதால், இந்த ஆண்டு பறவைகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments