வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த பக்கத்து வீட்டு குழந்தை

0 862

சென்னை சைதாப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுவரும் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து, பக்கத்து வீட்டின் மேல் விழுந்ததில், தலையில் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்றுவரும் மூன்றரை வயது குழந்தை கீர்த்திகாவின் மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதற்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்பதால், நரம்பு வழியாக மருந்து செலுத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை கூறியுள்ளது.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கீர்த்திகாவின் தாய், தந்தையை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு தரப்பிலும், தனிப்பட்ட முறையிலும் தேவையான உதவிகள் செய்துதரப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments