புதுச்சேரியில் யார் தலைமையில் கூட்டணி..? - முதலமைச்சர் விளக்கம்

தேர்தல் சமயங்களில், அப்போதைய சூழலை பொறுத்தே, புதுச்சேரியில் யார் தலைமையில் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சமயங்களில், அப்போதைய சூழலை பொறுத்தே, புதுச்சேரியில் யார் தலைமையில் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி திமுக அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமாரின் இல்லத்திருமண விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அதில் பேசிய அவர், புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்றாலும், மக்களுக்கான ஆட்சியாக நடைபெறுகிறதா? என கேள்வி எழுவதாகவும் கூறினார்.
Comments