ஆணுக்கு நிகராக மேயர் பிரியா பணியாற்றி வருகிறார் : அமைச்சர் சேகர்பாபு

தேனி பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்பிற்கு தனிப்பட்ட முறையில் மரியாதை கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் திருப்பணிகள் தொடர்பாக ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, தமிழகம் முழுவதும் ஆண்டுக்கணக்கில் குடமுழுக்கு நடத்தப்படாத கோயில்கள் குறித்து கணக்கெடுப்பு நடைபெறுவதாக கூறினார்.
மேலும், தமிழகம்-கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலை, தமிழக அறநிலையத்துறை வசம் கொண்டுவருவது குறித்து, கேரள அரசுடன் பேசி வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மேயர் பிரியா, பேரிடர் காலத்தில் ஆணுக்கு நிகராக பணி செய்வதை பாராட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments