25 நாட்கள் விண்வெளி பயணத்தை நிறைவு செய்துவிட்டு பூமிக்குத் திரும்பிய நாசாவின் 'ஓரியன்' விண்கலம்

ஆர்ட்டெமிஸ் ஒன் திட்டத்தின் கீழ் நாசாஅனுப்பிய ஆளில்லா ஓரியன் விண்கலம், 25 நாட்கள் விண்வெளி பயணத்தை நிறைவு செய்துவிட்டு, பூமிக்குத் திரும்பியது.
ஆர்ட்டெமிஸ் ஒன் திட்டத்தின் கீழ் நாசா அனுப்பிய ஆளில்லா ஓரியன் விண்கலம், 25 நாட்கள் விண்வெளி பயணத்தை நிறைவு செய்துவிட்டு, பூமிக்குத் திரும்பியது.
50 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, சோதனையோட்டமாக விண்வெளி வீரர்கள் போன்ற 3 பொம்மைகளுடன் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.
பூமியிலிருந்து 4 லட்சத்து 34 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்ற அந்த விண்கலம், நிலவுக்கு மேல் 127 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து விட்டு பூமிக்குத் திரும்பியது.
மணிக்கு 39 ஆயிரத்து 400 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி விரைந்த விண்கலம், வளிமண்டல உராய்வால் மணிக்கு 525 கிலோமீட்டர் வேகமாக குறைந்து, பாராசூட்கள் மூலம் மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில் பசிபிக் பெருங்கடலில் தரையிறக்கப்பட்டது.
Comments