மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கித்தவித்த இளைஞரை, பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்..!

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றின் மையப்பகுதியில் சிக்கித்தவித்த இளைஞரை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மணி முக்தா அணையில் இருந்து இன்று காலை வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், வடபூண்டி கிராமத்தை சேர்ந்த பரத் என்ற கல்லூரி மாணவர், இயற்கை உபாதைக்காக காலியாக இருந்த, ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றிருந்தபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்த பாறையில் ஏறி நின்று, இளைஞர் தவித்த நிலையில், அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
Comments