குஜராத் முதல்வராக இன்று பதவியேற்கிறார் பூபேந்திர பட்டேல்..!

0 1917

குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக அரசு இன்று பதவியேற்கிறது. விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர்.

குஜராத் சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்தை பெற்று அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று மதியம் 2 மணிக்கு பூபேந்திர பட்டேல் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.

குஜராத் காந்தி நகரில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா ராஜ்நாத்சிங், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். குஜராத்தின் 18 வது முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் பதவியேற்க உள்ளார்.

அவருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவந்த் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.

இதனிடையே பதவியேற்பு விழாவுக்கு முன்பாக நேற்று இரவு அகமதாபாதில் பிரதமர் மோடி பிரம்மாண்டமான சாலைப் பேரணியை நடத்தினார். இரவில் குளிரையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கானோர் சாலையின் இருபுறமும் நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு குஜராத்தின் அகமதாபாத், காந்தி நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments