சில்லறையில் சிகரெட்டுகளை விற்பதற்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை என தகவல்

0 2228

தனித்தனியாக சில்லறையில் சிகரெட்டுகளை விற்பதற்கு தடை விதிக்க, மத்திய அரசு பரீசிலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் புகையிலைப்பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த, சில்லறையாக சிகரெட் விற்பதை தடை செய்ய, நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. அதேபோல், அனைத்து விமான நிலையங்களிலிருந்தும் புகைபிடிப்பதற்கான தனி இடத்தை அகற்றவும் குழு பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கும்பட்சத்தில், விரைவில் சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படலாம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments