ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் குண்டு வீச்சு.. 4 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்..!

0 1298

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள், சிறிய ரக ராக்கெட் குண்டுகளை பாகிஸ்தான் வீசியதில், 4 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தலிபான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

எல்லைப்பகுதியில் தலிபான்களுக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்துவரும் நிலையில், இரு நாடுகளின் எல்லைப்பகுதியான தெற்கு கந்தகாரின் ஸ்பின் போல்டாக் பகுதியில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments