கச்சா எண்ணெய் விலை உச்ச வரம்பை முறியடிக்க இந்தியாவுக்கு உதவுவதாக ரஷ்யா அறிவிப்பு..!

ஜி 7 மற்றும் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட எண்ணெய் விலை உச்ச வரம்பை முறியடிக்க இந்தியாவுக்கு, ரஷ்யா உதவுவதாக தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணித்துள்ள எண்ணெய் விலை உச்ச வரம்பை மீறி, எண்ணெய் ஏற்றி செல்வதை தடுக்க கப்பலின் காப்பீட்டு சேவைகள் மற்றும் வாடகை டேங்கர்களின் மீது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தன.
கடந்த 9-ம் தேதி, ரஷ்ய துணை பிரதமரும், ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பவன் கபூரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதில் ஐரோப்பிய நாடுகளை சார்ந்திருந்தாத வகையில், இந்தியாவிற்கு பெரிய கப்பல் கட்டுவதற்கும், குத்தகை விடுவதற்குமான ஒத்துழைப்பை ரஷ்யா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments