சீன முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமினின் அஸ்தி கடலில் கரைப்பு..!

கடந்த மாத இறுதியில் இயற்கை எய்திய சீன முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமினின் அஸ்தி, யாங்சி ஆற்றின் முகத்துவாரத்தில் கரைக்கப்பட்டது.
அவரது அஸ்தி வைக்கப்பட்டிருந்த கலசம், சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்திலிருந்து பெய்ஜிங் விமான நிலையம் எடுத்துசெல்லப்பட்டு, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் பெய்ஜிங் நகரை வட்டமிடித்தப்பின், ஷாங்காய்க்கு கொண்டுசெல்லப்பட்டது.
ஷாங்காய் நகர துறைமுகத்தில் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்திய பின், போர்கப்பல் மூலம் யாங்சி ஆற்றின் முகத்துவாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, குடும்பத்தினரால் கடலில் கரைக்கப்பட்டது.
Comments