டாஸ்கர் எரிமலையில் இருந்து அடர்த்தியான சாம்பல் புகை வெளியேற்றம்.. சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

0 946

சிலியில் உள்ள டாஸ்கர் எரிமலையில் இருந்து சுமார் 20 ஆயிரம் அடி உயரத்திற்கு அடர்த்தியான சாம்பல் புகை மேலெழுவதால், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை முதல் எரிமலையில் இருந்து சாம்பல் புகை வெளியேறுவதோடு, லேசான நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன.

சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை எந்த சேதமும் ஏற்படாத நிலையில், எரிமலையின் நிலையற்ற தன்மையை குறிக்கும் வகையில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிமலையை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments